சிரிப்புக்கு புது முகவரி… மாது பாலாஜியின் 'Chamber of Humour'!
முன்பெல்லாம் நாடகங்கள் பார்க்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கு தான் அவை அரங்கேறும். ஏனென்றால் மற்ற இடங்களில் நாடகங்களை நடத்துவதற்கு இட வசதி கிடையாது. ஆனால் இப்போது புது முயற்சியாக திருமணம், பொது நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் நாடகத்தில் பங்கேற்கும் கலைஞர்கள் கலந்து கொண்டு நடிக்கிறார்கள். நாடகம் முடிந்ததும் பார்வையாளர்களை நாடக கலைஞர்கள் சந்தித்து பேசுவார்கள். இது எதற்கு என்றால் நாடகங்களை அடுத்த இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்கான ஒரு முன்னேற்பாடாகும். அது எப்படி சாத்தியம் என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
அக் 04, 2026