உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / காக்க... காக்க... யானைகளை காக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம்

காக்க... காக்க... யானைகளை காக்கும் ஏ.ஐ. தொழில்நுட்பம்

கோவையை அடுத்த மதுக்கரை அருகே காட்டுப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அந்த சம்பவத்துக்கு பிறகு காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தற்போது ஏ.ஐ., என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக இரவில் காட்டு யானைகள் ரயில் பாதையை கடப்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு ரயில் என்ஜின் டிரைவர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டனர். இதனால் யானைகள் இறப்பது தடுக்கப்பட்டது. சுமார் 2 ஆயிரத்து 500 தடவைக்கு மேல் யானைகள் ரயிலில் அடிபடுவது ஏ.ஐ., தொழில்நுட்பத்தினால் தடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொழில்நுட்பம் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை