உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / சுவாசக் கோளாறு ஏற்படுத்தும் குப்பை பிரச்னை | Madukkarai | Coimbatore

சுவாசக் கோளாறு ஏற்படுத்தும் குப்பை பிரச்னை | Madukkarai | Coimbatore

கோவையை அடுத்த மதுக்கரை நகராட்சியில் உள்ள கல்லுக்குழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் கேரளாவிலிருந்து கோழி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் இரவில் யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கிறார்கள். இது தவிர மதுக்கரையில் சேகரமாகும் குப்பைகள் அனைத்தும் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றது. ஆனால் அவற்றை அப்புறப்படுத்துவதில்லை. சிலர் அவற்றிற்கு தீ வைத்து விடுகிறார்கள். இதனால் அந்த பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னைகள் மற்றும் உடல்நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன. குப்பைகளை தீ வைத்து எரிப்பதாலும், கேரள கழிவுகளை கொண்டு வந்து கொட்டுவதாலும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை