6,000 முறை தண்டவாளத்தை கடந்தும் விபத்தில்லை யானைகள் இறப்பை தடுத்த ஏ.ஐ., தொழில்நுட்பம்
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் ரயில்கள், கோவை மதுக்கரை வழித்தடத்தில் செல்கின்றன. அப்பகுதியில் தண்ணீர் தேடி வரும் யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது, ரயிலில் சிக்கி இறப்பது, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, யானைகள் இறப்பை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, வனத்துறைக்கும், ரயில்வே துறைக்கும் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில், செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் செயல்படும், கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டது. இதன் மேற்பார்வையில், 12 உயர் கோபுரங்கள் அமைத்து, நவீன தெர்மல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனால் காட்டு யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தற்போது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.இது எப்படி சாத்தியமானது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.