/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ மிழக கேரள பக்தர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்பு | Kanyakumari | Mahadev temple
மிழக கேரள பக்தர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்பு | Kanyakumari | Mahadev temple
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை திற்பிலங்காடு காளைவிழுந்தான் ஸ்ரீ மஹாதேவர், கிருஷ்ண சுவாமி கோயில் கும்பாபிஷேக பூஜைகள் கடந்த 18 ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. யாக சாலையில் பூஜிக்கப்பட்ட 1008 கலசங்களால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆதீனங்கள், ஆன்மீக பெரியவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்
ஏப் 22, 2024