/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ குடிக்கவும் தண்ணி இல்லை...உப்பு தண்ணிக்கும் வழியில்லை! குடியிருப்புவாசிகள் புலம்பல்
குடிக்கவும் தண்ணி இல்லை...உப்பு தண்ணிக்கும் வழியில்லை! குடியிருப்புவாசிகள் புலம்பல்
கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள மலை நகரில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். ஆனால் அவர்களுக்கான அடிப்படை தேவையான தண்ணீர் வசதி அங்கு இல்லை. இதனால் அவர்கள் பெரும் துயரம் அனுபவிக்கிறார்கள். குடிக்க தண்ணீரும் இல்லை. உப்பு தண்ணீரும் இல்லை. இதனால் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தண்ணீர் இல்லாமல் அவதிப்படும் பொது மக்கள் அவஸ்தைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூன் 14, 2025