குடியின் அளவை பொறுத்து விடுபடும் சிகிச்சையும் மாறுபடும் | மனமே நலமா? பகுதி- 27 | Dr.Srinivasan
மதுவுக்கு அடிமையானவர்களுக்கு, அது ஒரு பிரச்னை என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மது குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும். பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். மன நோய்களை உருவாக்கி ஈரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யும் அளவிற்கு நிலைமை மோசமாகும் என்று அவருக்கு புரிய வைக்க வேண்டும். அப்போது தான் அது ஒரு பிரச்னை, அதிலிருந்து நாம் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தால் அவருக்கு சிகிச்சை அளிப்பது எளிதாகும். ஆனால், எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிற நோயாளியை மதுவிலிருந்து வெளியே கொண்டு வருவது சிரமம். ஒருவர் அருந்தும் மதுவின் அளவை பொறுத்துத் தான் அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிப்பது என்பதும் முடிவு செய்யப்படும். எனவே மதுவிலிருந்து விடுபடுவதற்கான பல்வேறு சிகிச்சை முறைகள், குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.