மனநோய் பற்றிய சமூக அவலம் மாற வேண்டும் | மனமே நலமா? பகுதி- 29 | Dr.Srinivasan
சமீபத்தில் 25 வயது இளம் பெண் அடிக்கடி மயங்கி விழுந்து விடுவதாக கூறி, அவரை சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர். அப்போது அவருக்கு நரம்பு தொந்தரவு ஏதும் இல்லை என்றும், மனப்பிரச்னை தான் காரணம் என்று தெரிய வந்தது. பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்து அனுப்பி வைத்தோம். அடுத்த வாரம் வரும் போது. அந்த பெண்ணுக்கு சிறு வயது முதல் இருந்த வந்த பிரச்னைகள் குறித்து எழுதி வரச் சொன்னபோது அந்த பெண்ணின் தந்தைக்கு திருமணத்துக்கு முன்பே மனப்பிரச்னை இருந்து வந்தது தெரிய வந்தது. அவரது தந்தையின் நோயால் அந்த பெண் பாதிக்கப்பட்டதால் அவர் மீது வெறுப்பு கொண்டிருந்தார். எனவே பிரச்னை என்ன என்று தெரிந்து கொண்டு அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும். மனநோய்க்கு எதிர்மறையான எண்ணம் சமூகத்தில் உள்ளது. இது பற்றி போதிய விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. மனநோய் பற்றிய சமூக அவலம் மாற வேண்டும். எனவே மனநோய் பற்றிய பாதிப்பு, விழிப்புணர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.