குழந்தைகள் மாற வேண்டுமானால் பெற்றோர் மாற வேண்டும் | மனமே நலமா? பகுதி- 30 | Dr.Srinivasan
குழந்தைகள் நல்ல காப்பி மாஸ்டர்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை அவர்கள் அப்படியே செய்வார்கள். குழந்தைகள் தவறுகள் செய்கிறார்கள் என்றால், நீங்கள் மாற்ற வேண்டியது அவர்கள் நடவடிக்கைளை அல்ல. உங்கள் நடவடிக்கைகளை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் பெற்றோர் செய்வதை அப்படியே கடைபிடிப்பார்கள். ஆனால் அவர்கள் நீங்கள் சொல்வதை கேட்க மாட்டார்கள். நீங்கள் எப்போதும் லேப் டாப் அல்லது மொபைல் பார்த்துக் கொண்டிருந்தால், அதை பார்க்கும் அவர்கள் அதைத் தான் செய்து கொண்டிருப்பார்கள். எனவே குழந்தைகள் மாற வேண்டும் என்றால் பெற்றோர் மாற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளை மாற்றுவதற்காக பெற்றோர் எப்படி மாறிக் கொள்ள வேண்டும் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.