உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் | மனமே நலமா? பகுதி- 31 | Dr.Srinivasan

குழந்தைகள் சுயமாக முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும் | மனமே நலமா? பகுதி- 31 | Dr.Srinivasan

குழந்தைகள் தனித்தன்மையுடன் செயலாற்ற பெற்றோர் அனுமதிக்க வேண்டும். வயதுக்கேற்ப வகையில் அவர்களாகவே முடிவெடுக்கும் திறனையும் அவர்களிடம் வளர்க்க வேண்டும். எல்லாவற்றையும் நாமே அவர்களுக்கு செய்து கொடுத்தால் அவர்கள் சுயமாக சிந்திக்க, சுயமாக செயலாற்ற, பின்விளைவுகளை பற்றி யோசிக்காத நிலைக்கு அவர்கள் சென்று விடுவார்கள்.குழந்தைகள் ஒரு பிரச்னையுடன் வந்தால் அதற்கான தீர்வுகளை நீங்களாக சொல்லாதீர்கள். தீர்வுகளை நீங்களே கொடுத்து பழகி விட்டால் அவர்களால் சுயமாக சிந்திக்க முடியாது. இதனால், தீர்வுகளை அவர்களால் கண்டுபிடிக்க முடியாமலே போய் விடும். எனவே குழந்தைகளை சுயமாக முடிவெடுக்க அனுமதிக்கும் போது, அவர்களின் சுயமதிப்பீடு, தன்னம்பிக்கை வளரும். பெற்றோர் அவர்களுக்கு சரியான முறையில் வழிகாட்ட வேண்டும். குழந்தைகளுடன் பெற்றோர் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை நீங்கள் உருவாக்கி கொடுக்க முடியும். குழந்தைகளை தனித்தன்மையுடன் செயலாற்றும் வகையில் வளர்ப்பது எப்படி என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 10, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ