இரு துருவ மனநோய்க்கும் இருக்கு சிகிச்சை | மனமே நலமா? பகுதி- 38 | Dr.Srinivasan
இருதுருவ மன நோய்கள் என்றால் ஒன்று மன வருத்த நோய். மற்றொன்று மன எழுச்சி நோய். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இருண்டு பக்கங்கள் போன்றது. இந்த நோய் பாரம்பரியம் அல்லது சூழல்களினால் ஏற்படும் என்று கண்டறியப்பட்டுள்ளது. மனவருத்தம் நோய் என்பது வருத்தம், எதிலும் ஆர்வமின்மை, மன சோர்வு, பசியின்மை, உறக்கமின்மை உள்ளிட்ட அறிகுறிகளை தவத்து கண்டறியலாம். இதற்கு எதிரானது மன எழுச்சி நோய். அதாவது எதிலும் ஆர்வம், தனக்குத்தான் எல்லாம் தெரியும், என்ற மன நிலை. மன வருத்த நோய் உள்ளவர்கள் தங்களுக்கு நோய் இருப்பதையாவது ஒப்புக் கொள்வார்கள். ஆனால் மன எழுச்சி நோய் உள்ளவர்கள் அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். எனவே இரு துருவ மனநோயை உடனடியாக கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளித்தால் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என்பதை இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.