உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / கடவுளுக்கு குதிரை வைப்பது மரபு... தெய்வீக மண் குதிரையே சிறப்பு...

கடவுளுக்கு குதிரை வைப்பது மரபு... தெய்வீக மண் குதிரையே சிறப்பு...

கோடைகாலத்தில் மண்பானை போன்ற மண்பாண்டப் பொருட்களுடைய தேவை நமக்கு தெரியும். அதிலும் குறிப்பாக குலதெய்வ வழிபாட்டுக்காக மண்குதிரை, மனித உருவங்கள், பசு, வேட்டை நாய் போன்றவற்றை செய்பவர்கள் எண்ணிக்கை மிக குறைவு. கோவை மாவட்டம், அன்னூர் ஊராட்சி ஒன்றியம், வடவள்ளி ஊராட்சி முகாசி செம்சம்பட்டி என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிலை வைத்து வழிபாடு, நேர்த்திக்கடன் மற்றும் தெய்வ காரியங்களுக்காக செய்யப்பட கூடிய அக்னி சட்டி, மண் குதிரை, வேட்டை நாய், பசு, மனித உருவங்கள், அம்மன், கருப்புசாமி, சிலைகள் போன்றவற்றை தயாரித்து வருகிறார் . இந்தப் பகுதியில் குலதெய்வம் வழிபாடு நேர்த்திக்கடனுக்காக மண் குதிரை வைக்கும் மரபு உள்ளதால் வருடம் முழுவதும் கலைநயத்துடன் மண்குதிரைகளை தயாரித்து வருகிறார். மண்ணால் செய்யப்படும் சிலைகளின் முக்கியத்துவம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மே 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ