மரப்பாலத்தை பார்த்திங்களே... இந்த சிறுபாலத்தை மறந்துட்டீங்களே சார்...
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில், மதுக்கரையில் மரப்பாலம் என்கிற இடத்தில் குறுகிய ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது; அந்தக்காலத்தில் உள்ள போக்குவரத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டதால், ஒருபுறத்தில் வாகனங்கள் வரும்போது, மறுபுறம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரே ஒரு கனரக வாகனம் மட்டுமே கடந்து செல்ல முடியும் என்பதால், பீக் ஹவர்ஸில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதற்கு ரயில்வே சுரங்கப்பாதையை அகலப்படுத்த வேண்டுமென ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி, மரப்பாலம் பகுதியில், 82.7 மீட்டர் நீளம், 21.9 மீட்டர் அகலத்துக்கு, நான்கு வழிச்சாலையாக சுரங்கப்பாதை விஸ்தரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும்,அந்தப் பகுதியில் வாழும் உள்ளூர் மக்களுக்கு சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தி உள்ளது. இது பற்றி இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.