மரப்பாலம் சுரங்க பாதைக்கு வரப்போகுது விடிவு காலம்!
கோவையிலிருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் என்ற இடத்தில் பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட குறுகிய பாலம் உள்ளது. அந்த பாலத்தின் வழியாக வாகனங்களும், மேலே ரயிலும் செல்கிறது. இதன் வழியாக ஒரு வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். காலை மற்றும் மாலை நேரங்களில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அந்த பாலத்தை பயன்படுத்தும் போது எதிரில் வரும் வாகனங்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் மரப்பாலம் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காணும் மரப்பாலம் விரிவாக்கம் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.
பிப் 02, 2025