பல ஆண்டு பிரச்னைக்கு தீர்வு | கோவை மரப்பாலத்தில் அமையுது புதிய பாலம்
கோவை-பாலக்காடு சாலையில் மரப்பாலம் என்ற பகுதியில் ரயில் கீழ் பாலம் உள்ளது. பழமையான இந்த பாலம் 5.5 மீட்டர் அகலம் உள்ளது. இதனால் அந்த பாலம் வழியாக ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டும் தான் செல்ல முடியும். கேரளாவிலிருந்து கோவை நகருக்குள் வரும் முக்கிய சாலையில் அமைந்துள்ள மரப்பாலம் ரயில் கீழ் பாலத்தை தினமும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கின்றன. ஒரு சமயத்தில் ஒரு வாகனம் மட்டும் தான் செல்ல முடியும் என்பதால் ஒரு திசையில் வரும் வாகனங்கள் வந்த பின்னர் தான் எதிர் திசையில் வரும் வாகனங்கள் செல்ல முடியும். காலை, மாலை நேரங்களில் மரப்பாலத்தில் மணிக்கணக்கில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்படும். இந்த நிலையில் மரப்பாலத்தில் புதிய பாலம் கட்டப்பட உள்ளது. குறுகிய மரப்பாலத்தினால் வாகன ஓட்டிகள் படும் அவஸ்தை குறித்தும், புதிய பாலம் அமைய உள்ளது குறித்தும் இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.