உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்பு/ Marathon event against drugs/ covai கோவை காரமடையில் ஃபிரண்ட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை, மேட்டுப்பாளையம் எம்எல்ஏ செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். ஒன்றரை கிலோ மீட்டர் முதல் 5 கிலோ மீட்டர் வரை பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. காரமடை ஆர்வி கலையரங்கத்தில் தொடங்கி காரமடை பஸ் ஸ்டாண்ட், வெள்ளியங்காடு வழியாக, பிரிவுகளுக்கு தகுந்தாற் போல மாரத்தான் வழித்தடம் அமைக்கப்பட்டிருந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், சுழற்கோப்பை மற்றும் மெடல் வழங்கப்பட்டது.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ