உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / விளைவிப்பது நாங்கள்... விலை சொல்வது புரோக்கர் தான்... மரவள்ளி கிழங்கு விவசாயி வேதனை

விளைவிப்பது நாங்கள்... விலை சொல்வது புரோக்கர் தான்... மரவள்ளி கிழங்கு விவசாயி வேதனை

கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் தற்போது பெருமளவு மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு பயிரான கரும்புக்கு அடுத்தபடியாக மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கு சாகுபடி, மற்ற பயிர்களான கரும்பு, வாழையை காட்டிலும் எளிதாக உள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் குறைந்த அளவு தண்ணீர் பாய்ச்சினால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். இதனால் நீர்வளம் குறைந்த பகுதியில் கூட விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் தற்போது மரவள்ளிக்கிழங்கு கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உள்ளது. மரவள்ளி கிழங்கு சாகுபடியால் நஷ்டம் அடையும் விவசாயிகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

டிச 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை