/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம் | Mariamman Temple Chariot | Udumalai
தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம் | Mariamman Temple Chariot | Udumalai
திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மன் கோயில் தேர்த் திருவிழா கடந்த 9 ம் தேதி நோம்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்ரல் 19 ம் தேதி கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தார். அம்மன் திருக்கல்யாண வைபவம் நேற்று மதியம் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் தேரோட்டம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசம் அடைந்தனர். ஏப்ரல் 26ம் தேதி ஊஞ்சல் உற்வசம், பரிவேட்டை மற்றும் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல் 27 ம் தேதி இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கு நடக்கிறது.
ஏப் 25, 2024