/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ 5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தகவல் | Pollachi | Masaniyamman temple
5 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தகவல் | Pollachi | Masaniyamman temple
பொள்ளாச்சி ஆனைமலை மாசானியம்மன் கோயில் கும்பாபிேஷகம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 12 ம் தேதி நடைபெறுகிறது. கும்பாபிேஷக விழாவில் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் துவங்கியது. கும்பாபிேஷகத்தில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் வசதிக்காக பெடரல் வங்கி சார்பில் 6 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பில் பேட்டரி வாகனம் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணாவிடம் வழங்கப்பட்டது. கும்பாபிேஷக பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணா தெரிவித்தார்.
டிச 09, 2024