உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / நீலகிரியின் வேளாங்கண்ணி எனஅழைக்கப்படும் திருத்தல தேர் பவனி| Matha Church | Chariot Festival

நீலகிரியின் வேளாங்கண்ணி எனஅழைக்கப்படும் திருத்தல தேர் பவனி| Matha Church | Chariot Festival

நீலகிரியின் வேளாங்கண்ணி என அழைக்கப்படும் திருத்தல தேர் பவனி | Matha Church | Chariot Festival | Coonoor நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ் கம்பெனி அருகே உள்ள வேளாங்கண்ணி மாதா திருத்தலம் நீலகிரியின் வேளாங்கண்ணி என அழைக்கப்படுகிறது. இத்தலத்தில் புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாள் திருவிழா கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலி மற்றும் மறையுரை நடந்தது. அன்னையின் பிறந்த நாள் விழா சிறப்பு திருப்பலி ஊட்டி மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் நடந்தது. மாலையில் குன்னூர் மறை வட்டார முதன்மை குரு அந்தோனிசாமி, மவுன்ட் பிளசன்ட் புனித சகாய மாதா ஆலய பங்குத்தந்தை ஆல்பர்ட் செல்வராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நடைபெற்றது. தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி, நற்கருணை ஆசிர் நடந்தது. இதில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பங்கு மக்களும் திரளாக பங்கேற்றனர். திருத்தலம வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஆரோக்கியராஜ் தலைமையில் பங்கு மக்கள், இளையோர், அன்பியங்கள் மற்றும் அருட்சபையினர் செய்தனர்.

செப் 09, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !