உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாடுகளுக்கு பொங்கல்...கவனம் தேவை... கால்நடைத்துறை எச்சரிக்கை!

மாடுகளுக்கு பொங்கல்...கவனம் தேவை... கால்நடைத்துறை எச்சரிக்கை!

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதற்காக உழவர்களுக்கு ஆண்டு முழுவதும் உதவிய மாட்டை குளிப்பாட்டி, அலங்கரித்து வழிபடுவார்கள். அப்போது மாடுகளுக்கு பொங்கல் அதிகமாக கொடுப்பார்கள். இது மாடுகளுக்கு செரிமான பிரச்னையை ஏற்படுத்தும். வயிறு உப்புசம் ஆகி மாடுகள் மூச்சு விட சிரமப்படும். உடனடியாக கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் அவற்றின் உயிருக்கே ஆபத்தாகி விடும். மேலும் மாட்டுப் பொங்கலின்போது மாடுகளுக்கு ரசாயனம் கலந்த ஸ்பிரேயர்களும் அடிக்கப்படுகின்றன. இதுவும் தவிர்க்கப்பட வேண்டும். எனவே மாடுகளை வைத்து மாட்டுப் பொங்கலை எவ்வாறு பாதுகாப்பாக கொண்டாடுவது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ