ரங்கோலி, புள்ளிக்கோலம், தண்ணீர் கோலம் போட்டு அசத்திய வாசகிகள் | Dinamalar |Meha Kolam Contest
ரங்கோலி, புள்ளிக்கோலம், தண்ணீர் கோலம் போட்டு அசத்திய வாசகிகள் | Covai | Dinamalar | Meha Kolam Contest தினமலர் நாளிதழ் சார்பில், மார்கழி கோலப்போட்டி கோவை வடவள்ளி செல்வபுரம் தெலுங்குபாளையத்தில் உள்ள குஜன்ஸ் ஆருத்ரா, அப்பார்ட்மெண்டில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான தினமலர் வாசகர்கள் பங்கேற்று ரங்கோலி, புள்ளிக்கோலம், தண்ணீர் கோலம் உள்ளிட்ட பல வண்ணக் கோலங்களை போட்டு அசத்தினர். ஆண்டாள்கிளி, பெண்கள் பாதுகாப்பு, ஈஷா ஆதியோகி என பல எண்ணங்களை வண்ணங்களாக்கி கோலம் போட்டு மிரள வைத்தனர். எந்தக் கோலத்தை தேர்வு செய்வது என திணறும் வகையில் ஒவ்வொரு கோலமும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும், தத்ரூபமாகவும் வரைந்து தினமலர் வாசிககள் அசத்தினர். போட்டியில் பங்கேற்றவர்ககளுக்கு போத்தீஸ், தி கேம்போர்டு இன்டர்நேஷனல் ஸ்கூல், ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனங்கள் இணைந்து பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.