உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / முதல் போட்டியில், சிக்சர்ஸ் அகாடமி அணி அசத்தல் | Coimbatore | Men's Basketball

முதல் போட்டியில், சிக்சர்ஸ் அகாடமி அணி அசத்தல் | Coimbatore | Men's Basketball

பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.எஸ்.ஜி., கோப்பைக்கான 8ம் ஆண்டு மாநில கூடைப்பந்து போட்டி பி.எஸ்.ஜி., டெக் கல்லுாரி வளாகத்தில் உள்ள பி.எஸ்.ஜி., உள்விளையாட்டு அரங்கில் துவங்கியது. 20ம் தேதி வரை போட்டிகள் நடைபெறுகிறது. போட்டியை பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் பிரகாசன், பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கிரிராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர். சென்னை, கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, திண்டுக்கல், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 27 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டிகள் நடத்தப்படுகின்றன. நாக் அவுட் சுற்றில் சிறப்பாக விளையாடி, முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இடையே ரவுண்ட் ராபின் முறைப்படி போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதல் போட்டியில், சிக்சர்ஸ் அகாடமி அணி 84 -35 என்ற புள்ளிக்கணக்கில் விங்ஸ் அகாடமியையும், ராஜலட்சுமி மில்ஸ் அணி 95 - 88 என்ற புள்ளிக்கணக்கில் பொள்ளாச்சி கூடைப்பந்து கழக அணியையும் வீழ்த்தின.

ஜூலை 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ