கோவை மெட்ரோ ரயில் சேவை... கருமத்தம்பட்டி வரை தேவை...
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கோவை-அவினாசி சாலையில் அமையும் மெட்ரோ ரயில் சின்னியம்பாளையத்தில் முடிவதை கருமத்தம்பட்டி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கு காரணம் கருமத்தம்பட்டி, சூலுார், சோமனுார் ஆகிய பகுதிகளில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் தங்கள் பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் கொண்டு வர வேண்டும் என்ற பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்தகைய பொது மக்களின் கோரிக்கைகள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 17, 2025