லேசர் ஒளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த வெலிங்டன் ராணுவ கட்டிடம் | Military center adventure program
லேசர் ஒளியில் அலங்கரிக்கப்பட்டிருந்த வெலிங்டன் ராணுவ கட்டிடம் | Military center adventure program | Wellington நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எம். ஆர். சி. ராணுவ மையத்தில் பெட்டாலியன் மாநாடு நடைபெற்றது. இதையொட்டி ராணுவ பகுதி முழுவதும் லேசர் ஒளியில் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த சாகச நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் நெருப்பு வளையத்திற்குள் குதித்து சாகச நிகழ்ச்சி நடத்தினர். கலை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளை ஆடையில் இசைக்கு தகுந்தவாறு நடனமாடியும், ஜிம்னாஸ்டிக் செய்தும் பார்வையாளர்களை கவர்ந்தனர். ராணுவ வீரர்களின் இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நிகழ்ச்சியில் ராணுவ அதிகாரிகள், வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.