உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / 'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' உலக சாதனை புரிந்த கோவை நீதிமன்ற பெண் ஊழியர்

'ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்' உலக சாதனை புரிந்த கோவை நீதிமன்ற பெண் ஊழியர்

கோவை, பீளமேடு, ஏர்போட் அருகிலுள்ள பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் முத்துமாரி,36. கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர், ஆங்கில கூட்டெழுத்துக்களை, ரிவர்ஸ் மிரர் ரைட்டிங் முறையில் தலைகீழாக எழுதி உலக சாதனை படைத்திருக்கிறார். சென்னை கலாம்ஸ் வேல்டு ரிக்கார்டு நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற முத்துமாரி, இந்திய அரசியலமைப்பு சட்ட புத்தகத்தில், பகுதி மூன்றில், இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமைகள் என்ற தலைப்பிலுள்ள , 50 குறிப்புகளை, கோடிட்ட தாளில், தலைகீழாக எழுதினார். ஆங்கில எழுத்துக்களை ரிவர்ஸ் மிரர் ரைட்டிங்கில், 45 நிமிடம், 5 செகண்டில் நான்கு பக்கத்திற்கு எழுதி உலக சாதனை படைத்தார். அவர் எப்படி உலக சாதனை செய்தார், அதற்கான ஊக்கம் யார் கொடுத்தது என்பது குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

நவ 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை