குரங்குகள் மூக்கில் வடியும் ரத்தம் | monkeys die of mysterious disease | udumalpet
குரங்குகள் மூக்கில் வடியும் ரத்தம் / monkeys die of mysterious disease / udumalpet திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக மையமாக உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கோயில் வளாகம் மற்றும் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. இங்கு வரும் பொது மக்களிடமிருந்து உணவுகளை பறித்து குரங்குகள் உண்டு வருவதோடு, பலர் குரங்குகளுக்கு உணவு அளித்தும் வருகின்றனர். இங்கு வசிக்கும் குரங்குகளில் இரு குரங்குகள் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்து இறந்தன. பல குரங்குகள் சோர்வடைந்த நிலையில் நடக்கக்கூட முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றன. இதுவரை இல்லாத வகையில் மர்ம நோய் தாக்கி குரங்குகள் இறந்து வருவதால் பொதுமக்கள், வனத்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். breath: உடுமலை வனச்சரக அலுவலர் மணிகண்டன் கூறுகையில், திருமூர்த்தி வனத்துறையினர் குரங்குகளின் ரத்த மாதிரி சேகரித்தனர். 5 குரங்குகள் மர்ம நோய் தாக்கி சோர்வடைந்த நிலையில் உள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகம் வனத்துறை டாக்டர் விஜயராஜன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்து உடனடி மருத்துவ சிகிச்சையாக வாழை பழத்தில் நியூரோபின் மாத்திரை வைத்து வழங்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட குரங்குகளை தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உணவில் விஷம், வெயிலின் தாக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்கள் இருந்தால் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கும். குரங்குகளுக்கு புது வகையான வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்ட குரங்குகள் பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு, அவற்றின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வைரஸ் நோய் தாக்குதலா, குடல் பகுதியில் பாதிப்பு, கணையம் பகுதியில் பாதிப்பா என ஐந்து வகையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பாதிப்பிற்கான காரணம் ஒரு சில நாட்களில் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். ஒன்பதாறு செக்போஸ்ட், சின்னாறு வனப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் மற்ற பகுதியிலுள்ள குரங்குகளுக்கு பாதிப்பில்லை என தெரியவந்துள்ளது என்றார்.