உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / திரை உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்

திரை உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய பட்ஜெட் படங்கள்

திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான அமுதவாணன் ஹிக்கி என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தோஷ் பிரதாப், சாக்க்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை கோவையில் குறும் படங்கள் தயாரித்து புகழ் பெற்ற பிரதாப் இயக்கி உள்ளார். இந்த படம் கமர்ஷியல் படங்கள் போல் அல்லாமல் இப்போதைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களை சொல்லும் படமாக இருக்கும். தற்போது வன்முறையை மக்கள் அதிகம் விரும்புகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனென்றால் சமீபத்தில் வெளியான சில படங்கள் அவ்வாறு அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஹிக்கி படத்தில் மாறுபட்ட பிரச்னை சொல்லப்பட்டிருக்கும். மனநல பிரச்னையை எப்படி கையாள வேண்டும் என்று இந்த படம் விளக்குகிறது. சமீபத்தில் சிறிய நடிகர்கள் நடித்த சாதாரண படங்கள் வரிசையாக வெற்றி பெற்றுள்ளன. சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெறுவது திரை உலகத்துக்கு நல்லது. ஆரோக்கியமாக இருக்கும். மாற்றத்தை ஏற்படுத்தும். அத்தகைய சிறிய பட்ஜெட் படங்கள் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை