உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்குவாதம் செய்தவர்களிடம் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை | Coimbatore | Argument with Mp Rasa

வாக்குவாதம் செய்தவர்களிடம் திமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை | Coimbatore | Argument with Mp Rasa

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் 8 கோடி ரூபாய் மதிப்பில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை திமுக எம்பி ராசா ஆய்வு செய்தார். பின்னர் சிக்கதாசம்பாளையம் சேரன் நகரில் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு அமைக்கும் பணியை துவக்கி வைத்து விட்டு கிளம்பினார். அப்போது சேரன் நகர் பகுதியில் நீண்ட காலமாக நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்த்துக்கோரி ராசாவை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைப்பதாக புகார் கூறி வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மழுப்பலாக பதில் சொல்லிவிட்டு ராசா நகர்ந்தார். ராசா சென்றதும் பொதுமக்களுடன் திமுக நிர்வாகிகள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

பிப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை