உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மண் மேடுகளை தாண்டி விண்ணில் பறந்த பைக் | MRF two wheeler race tournament| covai

மண் மேடுகளை தாண்டி விண்ணில் பறந்த பைக் | MRF two wheeler race tournament| covai

மண் மேடுகளை தாண்டி விண்ணில் பறந்த பைக் / MRF two wheeler race tournament/ covai கோவை கொடிசியா மைதானத்தில் எம்.ஆர்.எப் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப் பைக் ரேஸ் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 65 வீரர்கள் பங்கேற்றனர். பத்து வயதிற்கு உட்பட்டோர், 15 வயதிற்கு உட்பட்டோர், மோட்டோ கிராஸ் ஓபன் கேட்டகிரி உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. டர்ட் ரேஸ் என்று சொல்லப்படும் இந்த வித ரேஸில் , ஆங்காங்கே மண் மேடுகள் அமைக்கப்பட்டிருக்கும். வீரர் வீராங்கனைகள் மண் மேடுகளைத் தாண்டி விண்ணில் பறந்து சாகசம் செய்து காட்டினார். ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பந்தய வீரர்களை ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தேசிய சூப்பர் கிராஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் ஒன்பது சுற்று நடத்தப்படும். போட்டியின் முதல் சுற்று பூனேயிலும் இரண்டாம் சுற்று கோவையிலும் நடைபெற்றுள்ள நிலையில், மூன்றாவது சுற்று குஜராத்தில் நடைபெறும். ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் தேசிய சாம்பியன் இறுதியில் அறிவிக்கப்படுவார். கோவை போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் குஜராத்தில் நடைபெறும் மூன்றாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆக 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ