உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடனுதவி!

புதிதாக தொழில் தொடங்குவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடனுதவி!

மத்திய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மேம்பாட்டு மையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது. மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு சங்கம் சார்பில் இலவசமாக இப்பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. தற்போதைய தொழில்நுட்ப உலகில் சுயதொழில் புரிவோர் டிஜிட்டல் தளங்களில் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதன் காரணமாக தொழில் முனைவோராக உள்ள மகளிருக்கு இப்பயிற்சி வழங்கப்படுகிறது இதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் அவசியம், சோசியல் மீடியா மார்க்கெட்டிங், எஸ் இ ஓ., எஸ் இ எம்., இகாமர்ஸ் நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் பயிற்சிகள் அளிக்கின்றனர். மேலும், புதிதாக தொழில் தொடங்க உள்ளவர்களுக்கு பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது. தவிர புதிதாக தொழில் தொடங்க தேவையான ஆலோசனைகள் மற்றும் தொழில் திறன் பயிற்சிகளும் இங்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பிப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை