ஆட்டம் காணும் பவானி ஆற்றுப்பாலம்! விரைந்து நடவடிக்கை தேவை...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பவானி ஆற்றுப்பாலம் நீலகிரி மாவட்டத்தின் நுழைவாயில் ஆகும். இந்த பாலத்தை தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. போதிய பராமரிப்பு இல்லாததால் பவானி ஆற்றுப்பாலம் சேதமடைந்து, வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிர்வு ஏற்படுவதாக கூறப்படுகிறது. ஆட்டம் காணும் பவானி ஆற்றுப்பாலத்தின் மோசமான நிலை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
மார் 20, 2025