ரூ.10 கோடி விழுங்கிய பேருந்து நிலையம்… 17 ஆண்டுகளாக பயனில்லை!
கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனியில் ரூ.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இங்கிருந்து ஊட்டி, மேட்டுப்பாளையம் செல்லும் பஸ்கள் புறப்பட்டு செல்லும். ஆனால் புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட்டது முதல் பெரும்பாலான நாட்களில் பஸ்கள் உள்ளே செல்லாமல் சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. மேலும் பஸ் நிலையமும் போதிய பராமரிப்பு இல்லாமல் கவனிப்பாரற்று காணப்படுகிறது. ரூ.10 கோடி செலவில் கட்டப்பட்ட பஸ் நிலையம் வீணாவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
செப் 10, 2026