உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / பாடாய் படுத்தும் பட்டா | எங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

பாடாய் படுத்தும் பட்டா | எங்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பகுதி வேடர் காலனி. இந்த பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமாக சுமார் 4.5 ஏக்கர் இடம் உள்ளது. அங்கு தகுதிவாய்ந்த வீடற்ற ஏழை மக்களுக்கு, பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து பல ஆண்டுகளாக பட்டா வேண்டி விண்ணப்பம் செய்திருந்தவர்களின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 167 பேருக்கு வேடர் காலனியில் பட்டா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. வேடர் காலனி பகுதியில் 18 பேர் பட்டா பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் இப்பகுதி மக்கள் பட்டா வாங்காமல் போராட்டம் செய்தனர். வேடர் காலனியில் 120க்கும் மேற்பட்டோர் பட்டா வேண்டி விண்ணப்பித்திருந்த நிலையில் குறைவான அளவே பட்டா கிடைத்துள்ளது. அனைவருக்கும் பட்டா வேண்டும் என தீப்பந்தம் ஏந்தி போராட்டம், கூடாரம் அமைத்து போராட்டம் என பல போராட்டங்களை நடத்தினர். வேடர்காலனி பகுதி மக்களை பாடாய் படுத்தும் பட்டா பிரச்னை குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

மார் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை