திறந்தாச்சு... ஆனால் பயன்பாட்டுக்கு வருமா?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ. 1.29 கோடி மதிப்பீட்டில் சந்தை வளாகம் கட்டப்பட்டுள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இருப்பினும் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் சிறுவர்கள் விளையாடும் மைதானமாகவும், இரவில் சமூக விரோதிகள் பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. எனவே சந்தை வளாகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.
ஜூலை 06, 2025