கமிஷனர் வீட்டு எதிரே தீ வைத்து எரிக்கப்படும் குப்பைகள் | Municipality Meeting | Udumalpet
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சியில் குப்பை அகற்றுவதில் மிகப்பெரிய முறைகேடு நடந்து வருவதாக ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் குற்றம் சுமத்தினர். உடுமலை நகராட்சி கூட்டம் தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் பேசுகையில், நகர பகுதிகளில் குப்பை முறையாக அகற்றப்படவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. குப்பைக்கு தீ வைத்து எரிப்பதால் மக்கள் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கமிஷனர் வீட்டிற்கு முன்பே குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. தற்போது கூட குப்பைகள் எரிந்து வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்று பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் 40 முதல் 50 துாய்மைப் பணியாளர்கள் உள்ளதாக அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர். ஆனால் 10 பேர் கூட பணியில் இருப்பதில்லை. குப்பையில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. மாஸ் கிளீனிங் எனக்கூறி அதிகாரிகள் இல்லாமல் குறைந்தளவு பணியாளர்களைக் கொண்டு துாய்மைப் பணிகள் பெயரளவிற்கு நடக்கிறது.