/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு | national kudo championship achievement | Kovai
சாதனை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு | national kudo championship achievement | Kovai
குஜராத் மாநிலம் சூரத்தில் தேசிய கூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகம் சார்பில் கோவை எம்.எம்.ஏ. அகாடமியை சேர்ந்த 7 மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏழு வயது முதல் 21 வயது வரையிலான வீரர்களுக்கு சப் ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தமிழக வீரர்கள் ஒரு தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் என 13 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்தனர். கோவை திரும்பிய சாதனை வீரர்களுக்கு மாவட்ட கூடோ சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேளதாளத்துடன் மலை அணிவித்து இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
நவ 18, 2024