தமிழ்நாடு அணி சப் ஜூனியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் | Coimbatore | National level cycling
தமிழ்நாடு அணி சப் ஜூனியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் | Coimbatore | National level cycling competition ஹரியானா மாநிலத்தில் தேசிய அளவிலான மலை வழி சாலை சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. டில்லி, கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். கோவையில் இருந்து தமிழக அணி சார்பாக ஆஸ்ரம் பள்ளி மாணவி ஹாசினி 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 2 தங்கப்பதக்கமும், மாணவர்கள் பிரிவில் 9 ம் வகுப்பு மாணவன் பிரனேஷ் 2 தங்கப்பதக்கங்களும், 16 வயதிற்குட்பட்ட பிரிவில் 11 ம் வகுப்பு மாணவி சௌபர்ணிகா 2 வெண்கல பதக்கங்களும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். கோவை திரும்பிய மாணவர்களுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்ரம் பள்ளி தாளாளர் தேவேந்திரன், நிர்வாக இயக்குனர் கௌரி உதயேந்திரன் மற்றும் கோவை சைக்கிளிங் அசோசியேஷன் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்தினர். போட்டியில் தமிழ்நாடு அணி சப் ஜூனியர் பிரிவில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது.