தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி | National level karate tournament | covai
தமிழ்நாடு கராத்தே சங்கம் சார்பாக 4 வயது முதல் 13 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில சப் ஜூனியர் கராத்தேப் போட்டி சென்னையில் நடைபெற்றது. பல்வேறு வயது மற்றும் எடைப் பிரிவுகளில் கட்டா மற்றும் குமித்தே போட்டிகள் நடைபெற்றன. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கோவையில் இருந்து மை கராத்தே இண்டர்நேஷனல் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவர்கள் சர்வேஷ், அஸ்வ பிரதா மற்றும் சாய் தக்ஷன் ஆகிறோர் குமித்தே தனி பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். கோவை திரும்பிய வெற்றி வீரர்கள் மற்றும் மையத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ், பயிற்சியாளர்கள் சிவமுருகன், அரவிந்த், விது சங்கர், சரவணன், விமல் பிரசாத், பவிலாஷ், பிரசாந்த், தேவதர்ஷினி ஆகியோருக்கு தடபுடல் வரவேற்பு அளிக்கப்பட்டது.