நவோதயா பள்ளி தொடங்கினால் தரமான கல்வி கியாரண்டி
கோவையில் நவோதயா பள்ளிகள் கிடையாது. இந்த பள்ளிகள் தரமானதாகவும், கட்டணம் குறைவாகவும் இருக்கும். இரு மொழி மற்றும் மும்மொழிகளும் கற்றுக் கொடுக்கப்படும். நவோதயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையாக அவர்களின் கல்வித் தரம் உயரும். இத்தகைய நவோதயா பள்ளிகளை கோவை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் கொண்டு வர வேண்டும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட உள்ள எம்.பி., வேட்பாளர்களுக்கு கோவை வாக்காளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அது பற்றிய வீடியோ தொகுப்பை காணலாம்.
ஏப் 16, 2024