/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ கோவை அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஏற்பாடு | sports | covai
கோவை அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி ஏற்பாடு | sports | covai
கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அ குறுமைய தடகளப் போட்டிகள் அரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் பள்ளி சார்பில் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. மாணவ, மாணவியருக்கு 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் 100 மீட்டர், 200 மீ, 400 மீ, 600 மீ, 800 மீ, 1500 மீ ஓட்டம், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 2000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவ மாணவியர் மாவட்ட அளவிலான தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
ஆக 17, 2024