மாநில போட்டிக்கு முன்னேறிய அணிகள் | sports | covai
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கோ கோ போட்டி திருப்பூர் அணைப்புதூர் ஏ. கே.ஆர். அகாடமியில் நடந்தது. அதில் மாணவர்கள் பிரிவில் ஏ கே ஆர் அகாடமி மற்றும் மணி பப்ளிக் பள்ளி அணிகள் மோதியது. அதில் ஏ. கே. ஆர் அகாடமி 11: 7 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மாணவியர் பிரிவில் காங்கயம் கார்மல் பள்ளியும், அனுப்பர்பாளையம் அரசு பள்ளி அணிகள் மோதியது. அதில் கார்மல் பள்ளி அணி 7:4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. எம். என். சி.சி. பள்ளியும், விசாலாட்சி பள்ளி அணியும் மோதிய போட்டியில் எம்.என்.சி.சி. பள்ளி அணி 12:3 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. உடுமலை எஸ். வி. ஜி., பள்ளியும், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியும் மோதிய போட்டியில் எஸ். வி. ஜி பள்ளி 9:4 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. போட்டியில் சிறப்பாக விளையாடும் மாணவர் மற்றும் மாணவியர் கொண்ட மாவட்ட அணி தேர்வு செய்யப்பட்டு, மாநில போட்டியில் திருப்பூர் மாவட்டத்திற்காக பங்கேற்பர்.