அசத்தலான ஆட்டம் | sports | covai
திருப்பூர் பிஷப் உபகாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி நடக்கிறது. இதில் மாவட்டம் முழுதும் இருந்து 164 பள்ளி மாணவர், 64 மாணவியர் பங்கேற்றனர். போட்டியை தலைமை ஆசிரியர் பீட்டர் மரியதாஸ் துவக்கி வைத்தார். மாவட்ட சதுரங்க அசோசியேஷன் நிர்வாகிகள் போட்டியை ஒருங்கிணைத்தனர். மாணவர் பிரிவில் முதல் மூன்று இடங்கள் முறையே முதல் மூன்று இடங்களை திருமுருகன் மெட்ரிக் பள்ளி கோகுல் கிருஷ்ணா, பிஷப் பள்ளி மாதவன் மற்றும் பத்மபிரியன் கைப்பற்றினர். மாணவியர் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே இன்பேன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி டிரினிடாமெர்சி, முருகு மெட்ரிக் பள்ளி ஹாசினி மற்றும் ஸ்ரீசாய் பள்ளி ஆதி சம்ரித்தா பெற்றனர். முதல் இடங்களை பிடித்தவர்கள் மாநில செஸ் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
செப் 13, 2024