/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ வியாபாரிகளிடம் அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி | couple arrested for money fraudulence |covai
வியாபாரிகளிடம் அதிக லாபம் தருவதாக கூறி ₹1 கோடி மோசடி | couple arrested for money fraudulence |covai
கோவை பூ மார்க்கெட் பகுதியில் பூஜை பொருட்கள் விற்பனை செய்பவர் தமிழ் பாண்டியன். கோவை ஆனந்த நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் மனைவி பிரியதர்ஷினியுடன் கோயிலுக்கு வருவார். அப்போது தமிழ் பாண்டியன் கடையில் பூஜை பொருட்கள் வாங்குவது வழக்கம். தினமும் பூஜை பொருட்கள் வாங்குவதால் விஜயகுமார் என்ன வேலை செய்கிறார் என தமிழ் பாண்டியன் கேட்டார். அதற்கு விஜயகுமார் எனக்கு பலசரக்கு கடை உட்பட 10க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. நான் ஒரு சாமியார். தினமும் கடையை திறந்ததும் பூஜை செய்வேன். அதனால் தினமும் பூஜை பொருள் தேவைபடுகிறது என கூறியுள்ளார்.
அக் 04, 2024