உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் 3 இடங்களில் மண் சரிவு | Ooty train cancelled

மழையால் ஊட்டி மலை ரயில் தண்டவாளத்தில் 3 இடங்களில் மண் சரிவு | Ooty train cancelled

தொடர் மழையால் மேட்டுப்பாளையம் - குன்னூர் மலை ரயில் பாதை கல்லார் பகுதியில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு தண்டவாளத்தை சேதப்படுத்தியது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மலை ரயில் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. சேதமடைந்த தண்டவாளங்களை சீரமைக்க மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயில்வே ஊழியர்கள் கல்லார் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் மீண்டும் மலை ரயில் இயக்கப்படும்.

நவ 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை