உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கால்பந்து 'ஏ' டிவிஷன் லீக் போட்டி | sports | covai |

மாவட்ட கால்பந்து 'ஏ' டிவிஷன் லீக் போட்டி | sports | covai |

கோவை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து ஏ டிவிஷன் லீக் போட்டி அண்ணா பல்கலை மண்டல மைய மைதானத்தில் கடந்த 15ம் தேதி துவங்கியது. டிசம்பர் 5ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் 13 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். முதல் போட்டியானது அத்யாயனா கால்பந்து கழகம் மற்றும் பேரூர் கால்பந்து கழகம் இடையே நடந்தது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அத்யாயனா அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து வீனஸ் கால்பந்து கழகம், ஹீரோஸ் கால்பந்து கழகம் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது. இன்று நடந்த போட்டியில் அத்யாயனா அணி 5-2 என்ற கோல் கணக்கில் ஹீரோஸ் அணியை வென்றது. தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக நடக்கிறது.

நவ 17, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை