கற்பகம் மற்றும் கே.சி.டி. அணி வெற்றி | sports | covai
கோவை விழாவின் 17வது பதிப்பாக பல்வேறு இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக கல்லுாரிகளுக்கு இடையே வாலிபால் மற்றும் பாட்மின்டன் போட்டிகள் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. வாலிபால் போட்டியில் 22 அணிகள் மற்றும் பாட்மின்டன் போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன. வாலிபால் இறுதிப் போட்டியில் கற்பகம் பல்கலை மற்றும் ரத்தினம் கல்லுாரி அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடந்த போட்டியில் கற்பகம் பல்கலை அணி வெற்றி பெற்றது. பாட்மின்டன் போட்டியில் கே.பி.ஆர். மற்றும் கே.சி.டி. கல்லுாரி அணிகள் மோதின. இதில் கே.சி.டி. அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
டிச 02, 2024