350 சிறுவர்கள் 10 நிமிடத்தில் தீப்பந்த சிலம்பாட்டம் ஆடி சாதனை | A Silambam Playing with fire | covai
கோவையில் சிறுவர்கள் 350 பேர் பங்கேற்ற தீப்பந்த சிலம்பாட்ட சாதனைப் போட்டி நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோவை டெக்கத்லான், வீரவர்மன் வீர சிலம்பாட்ட பயிற்சி பள்ளி மற்றும் பிராட்வே இணைந்து நோபல் உலக சாதனை முயற்சி போட்டியை நடத்தியது. சிறுவர்கள் 350 பேர் பங்கேற்ற தீப்பந்த சிலம்பாட்ட சாதனைப் போட்டி நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஒற்றை கம்பில் இரட்டை தீப்பந்தங்கள் கொண்ட சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி முதலில் நடந்தது. நான்கு முதல் 8 வயதுக்கு உட்பட்ட 150 குழந்தைகள் 10 நிமிடங்கள் இரட்டை சிலம்ப தீப்பந்தங்களை சுழற்றினர். நட்சத்திர வடிவில் குழந்தைகள் வரிசைப்படுத்தப்பட்டு இருந்தனர். அடுத்ததாக நடந்த 8 முனைகள் கொண்ட நட்சத்திர வடிவ தீப்பந்தங்களை 5 நிமிடங்கள் சுழற்றினர். பத்து வயதுக்கு மேற்பட்ட 200 குழந்தைகள் இதில் பங்கேற்றனர்.