/ மாவட்ட செய்திகள்
/ கோயம்புத்தூர்
/ தென்னைக்கு செலவில்லாத உயிர்சத்து | Inespensive nutrition for coconuts | Pollachi
தென்னைக்கு செலவில்லாத உயிர்சத்து | Inespensive nutrition for coconuts | Pollachi
மாட்டுச்சாணத்தை கரைத்து தொட்டியில் விட்டு நீருடன் கலந்து தென்னை மரங்களுக்கு பாய்ச்சி எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் பொள்ளாச்சி விவசாயி ஈடுபட்டுள்ளார். தென்னை நகரம் என அழைக்கப்படும் பொள்ளாச்சி அடையாளத்தை இழக்கும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக தென்னையில் பல்வேறு நோய்கள் தாக்கி வருகின்றன. விலை வீழ்ச்சி, வறட்சி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நோய் தாக்குதல் பெரும் பிரச்னையாக உள்ளது. இதில் கேரளா வேர்வாடல் நோய் பிரச்னைக்கு தீர்வே இல்லாததால், மரங்களை வெட்ட வேண்டிய இக்கட்டான சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
டிச 27, 2024