உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / கோயம்புத்தூர் / மத்திய அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஏற்பாடு | Skill upgradation training | pollachi

மத்திய அரசின் கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் ஏற்பாடு | Skill upgradation training | pollachi

பொள்ளாச்சி அருகே மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் ஆணையம் சார்பில் மண்பாண்ட தொழிலுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் வாயிலாக மண்பாண்ட தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு இந்தியா முழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எழுத படிக்க தெரிந்த 55 வயதுக்கு உட்பட்ட மண்பாண்ட தொழிலில் முன் அனுபவம் உள்ள கைவினைஞர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு கர்நாடக மாநிலம் கானாப்பூரில் இயங்கி வரும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கான பயிற்சி மையத்தில் 10 நாட்கள் இலவச பயிற்சி வழங்கப்பட்டது. அங்கு பயிற்சி பெற்ற கைவினைஞர்களை கொண்டு மாவட்டம் தோறும் புதிதாக மண்பாண்ட தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் 20 பேர் கொண்ட குழு மண்பாண்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி ஆனைமலை காளியாபுரம், ஆர்.பொன்னாபுரம், நல்லாம்பள்ளி, சூலுார் சுல்தான்பேட்டை ஆகிய நான்கு கிராமங்களில் தலா 20 பேருக்கு கடந்த 10 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆர்.பொன்னாபுரத்தில் பயிற்சியாளர் பாலமுருகன் பயிற்சி அளித்தார். தமிழ்நாடு தெலுங்கு குலாளர் மண்பாண்ட தொழிலாளர் நலச்சங்க தலைவர் செல்வராஜ், துணை தலைவர் காளிதாஸ் மற்றும் நிர்வாகிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர். பயிற்சியாளர் கூறுகையில், மண்பாண்ட தொழிலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு நவீன முறையில் மாற்றம் செய்து அதற்கேற்ப பொருட்கள் தயாரிக்க தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது.  மண் பிசைவது முதல், சூளையில் வைப்பது வரை பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதில் பங்கேற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் மானியத்தோடு மின்சார மண்பாண்ட சக்கரம் வழங்கப்படும் என்றார்.

டிச 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை